காளகஸ்தியில் மேலும் 4 கோபுரங்கள் இடியும் அபாயம்
காளகஸ்தியில் மேலும் 4 கோபுரங்கள் இடியும் அபாயம்
காளகஸ்தியில் மேலும் 4 கோபுரங்கள் இடியும் அபாயம்
ADDED : மே 29, 2010 09:18 AM
நகரி : காளகஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது இக்கோயிலில் மேலும் 4 கோபுரங்கள் இடிந்து விழும் அபாய நிலை உருவாகி உள்ளது.
இடிந்து விழுந்த ராஜகோபுரத்தின் அருகில் உள்ள பிட்சலா கோபுரமும் சிதைவடைந்த நிலையில் உள்ளது. காளகஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுராம்பிகை சன்னதிகள் மேல் உள்ள கோபுரங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பால ஞானாம்பிகை சன்னதி கோபுரத்தின் மீதிருந்தும் மண் கொட்டுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.